பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில துணை தலைவர் பங்கேற்பு

குமாரபாளையத்தில் நடந்த பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாநில துணை தலைவர் பங்கேற்று பேசினார்

Update: 2023-05-24 08:45 GMT

குமாரபாளையத்தில் நடந்த பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாநில துணை தலைவர் ராமலிங்கம் பேசினார்.

குமாரபாளையத்தில் நடந்த பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாநில துணை தலைவர் பங்கேற்று பேசினார்.

நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. சிறப்பு செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை தலைவர் ராமலிங்கம், தென் சென்னை பார்வையாளர் ரவிச்சந்திரன் பங்கேற்று பேசினர். மாவட்ட பொதுச்செயலர் வக்கீல் சரவணராஜன் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.

மாநில துணை தலைவர் ராமலிங்கம் பேசியதாவது: இரண்டு வருட தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாகத்தான் நடந்து வருகிறது. சாராய சாவு, டாஸ்மாக்கில் அதிக விலை, தி.மு.க.வினர் அதிக சொத்து சேர்ப்பது என்பது உள்ளிட்டவைகள் அடங்கும்  என்றார் அவர்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மே 30 முதல் ஜூன் 30 வரை, பா.ஜ.க.ஆட்சியின் சிறப்பு குறித்து பொதுக் கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள், தெருமுனை பிரசாரங்கள், வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய திட்டமிடல் குறித்து சிறப்பு செயல் வீரர்கள் கூட்டம் மாநிலம் முழுதும் வரலாற்று சாதனையாக 65 இடங்களில் நடந்தது.

இதுவரை எந்த அரசியல் கட்சியும் இதுவரை இதுபோல் செய்தது இல்லை. ஜூன் 9 முதல் மாநில தலைவர் நடைபயணம் செல்வது குறித்து விரைவில் பயண திட்ட விளக்கம் தெரிவிக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத்திற்கு யார் வருவது என்பது தான் பார்க்கப்பட்டது. தேசிய தலைவர்கள் பிரசாரத்திற்கு வந்திருக்கலாம். ஆனால் இந்திய தலைமைக்கு மோடி வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வி 2014 தேர்தலில் எதிரொலிக்கும். மீண்டும் மோடி என்ற கோஷத்துடன் எங்கள் பயணம் தொடரும். இரண்டாயிரம் ரூபாய் நோட்டு செல்லுமா? செல்லாதா? என்ற நிலை உள்ளது. டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் தொகையை இரண்டாயிரம் ரூபாயாக இல்லாமல் வங்கியில் செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

இதில், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேலு, மாவட்ட துணை தலைவர் கனகராஜ், நிர்வாகிகள் தினேஷ்குமார், சுபாஷ், ராஜா, சரவணன், உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News