மேற்கூரையுடன் கூடிய வாரச்சந்தை கட்டும் பணிக்கு பூமி பூஜை

குமாரபாளையத்தில் மேற்கூரையுடன் கூடிய வாரச்சந்தை வளாகம், சமுதாய கழிப்பிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.;

Update: 2023-12-17 08:45 GMT

குமாரபாளையத்தில் மேற்கூரையுடன் கூடிய வாரச்சந்தை வளாகம், சமுதாய கழிப்பிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் உமா, மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில், உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் மேற்கூரையுடன் கூடிய வாரச்சந்தை வளாகம், சமுதாய கழிப்பிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

குமாரபாளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட உள்ள புதிய மேற்கூரையுடன் கூடிய வாரச்சந்தை மற்றும் ராஜாஜி குப்பம் பகுதியில் 24.96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாய கழிப்பிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மற்றும் பூமி பூஜை நடந்தது. நகராட்சி தலைவர், வடக்கு நகர தி.மு.க. செயலர் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் உமா, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், தெற்கு நகர செயலர் ஞானசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் நடந்த தீ விபத்தில் பாதிக்கபட்டோருக்கு நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நிதியுதவி

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் ஏரித்தெருவில் மாடியில், சிமெண்ட் அட்டை போடப்பட்ட வீட்டில் வசிப்பவர் ராம்குமார், (45). விசைத்தறி கூலித்தொழிலாளியான இவரது வீட்டில் . நேற்று முன்தினம் அதிகாலை 2: மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் இவரது வீட்டு துணிமணிகள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் எரிந்து சேதமாகின. இவர்களுக்கு உதவிடும் வகையில் குமாரபாளையம் வடக்கு தி.மு.க. செயலரும், நகராட்சி தலைவருமான விஜய்கண்ணன் நிவாரண பொருட்கள் வழங்கி, உதவித்தொகை வழங்கினார். நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சுமதி, ஜேம்ஸ், நிர்வாகிகள் விக்னேஷ், கந்தசாமி, ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News