பள்ளிபாளையத்தில் பாலம் அமைக்க பூமி பூஜை
பள்ளிபாளையத்தில் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது.;
பள்ளிபாளையத்தில் பூமி பூஜை நடைபெற்றது.
பள்ளிபாளையம் நகராட்சியில் நமக்கு நாமே 2023-..24 திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் அமைக்கும் பணிக்காக வார்டு எண்: 3,5,7,9,10,11,12,13 ஆகிய வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகள் ஈ.ஆர். தியேட்டர் அருகில் மற்றும் பெரும்பாறை காடு ஆகிய இரண்டு இடங்களில் ரூ.42.00 லட்சம் மதிப்பில் பூமி பூஜை திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் மதுரா செந்தில் தலைமையில் நடைபெற்றது.
நகர செயலர் குமார், நகராட்சி தலைவர் செல்வராஜ், நகராட்சி துணை தலைவர் பாலமுருகன், ஆணையாளர் தாமரை, கவுன்சிலர்கள் வினோத்குமார், மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர். இந்த பணிகள் செய்திட வேண்டி இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை சாத்தியமில்லாத நிலை இருந்து வந்தது. மாவட்ட செயலர் மதுரா செந்தில், நகர செயலர் குமார், நகராட்சி தலைவர் செல்வராஜ் முயற்சியின் பேரில் இந்த பணி நடைபெறும் சூழ்நிலையை அடைந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நகராட்சி தலைவர் உடனுக்குடன் பணிகளை செய்து கொடுத்து வருகிறார்.
பூமி பூஜையில் மாவட்ட கழக நிர்வாகிகள்,நகரக் கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.