வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் சங்கபுதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் சரவணராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 2023, 2024ம் ஆண்டிற்கான புதிய தலைவராக சரவணராஜன், செயலராக நடராஜன், பொருளராக நாகப்பன், துணை தலைவராக நந்தகுமார், துணை செயலராக ஐயப்பன், செயற்குழு நிர்வாகிகள், மூத்த ஆலோசனை குழு நிர்வாகிகள், இளைய ஆலோசனை குழு நிர்வாகிகள், நூலகராக கருணாநிதி ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், செந்தூர் பவுண்டேசன் இணைந்து மகளிர் குழுக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் மண்டபத்தில் செந்தூர் பவுண்டேசன் நிர்வாகி கலாவதி தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், நீதிபதியுமான விஜய் கார்த்திக் பங்கேற்று, நீதிமன்ற வழக்குகளை யாரெல்லாம் இலவசமாக அணுகுவது? எவ்வாறு விண்ணப்பிப்பது? அரசு திட்டங்களை எவ்வாறு பெறுவது? என்பது குறித்து பேசினார். மேலும் பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று, அதற்கு தீர்வு எப்படி பெற வேண்டும் என விளக்கி கூறினார். வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில்குமார், நிர்வாகிகள் மணிகண்டன், வினோத், ஜீவானந்தம், பூபதி உள்பட பலர் பங்கேற்றனர்.