குமாரபாளையத்தில் பக்ரீத் சிறப்பு வழிபாடு
குமாரபாளையத்தில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஏராளமான இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டி நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.
இஸ்லாமிய பெருமக்களால் தியாகத்திருநாள் எனப்படும் பக்ரீத் திருநாளையொட்டி நாடு முழுவதும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகிறது. குமாரபாளையம் கலைமகள் வீதியில் உள்ள ஜமாத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக புறப்பட்டு சேலம் முதன்மைச் சாலை எடப்பாடி சாலை வழியாக ஜமாத்தின் மயானத்தை வந்தடைந்தனர். அங்கு மயானத்தில் மேடையில் ஊதுபத்தி வைத்து தங்கள் மூதாதையர்களுக்கு நன்றி கூறி, சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு வழி நெடுகிலும் திருக்குர்ஆன் ஓதியபடி வந்தனர்.