ராயல் பள்ளியில் விழிப்புணர்வு சொற்பொழிவு

குமாரபாளையம் ராயல் பள்ளியில் மாணவர் களின் முன்னேற்றத்திற்காக விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2023-12-23 11:45 GMT

குமாரபாளையம் ராயல் பள்ளியில் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில், பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசினார்.

குமாரபாளையம் ராயல் பள்ளியில் மாணாக்கர்களின் முன்னேற்றத்திற்காக விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

குமாரபாளையத்தில் முதன்முறையாக மாணாக்கர்களின் வளர்ச்சிக்காக விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் அன்பழகன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பங்கேற்று நாம் உயர நாடுயரும் என்ற தலைப்பில் பேசினார்.

வணக்கம் கூறுவதன் அவசியத்தையும், தமிழ்த்தாய் பாடுவதன் முக்கியத்துவம் குறித்தும், வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்ற குரளின் விளக்கத்தையும் பேசியதுடன், கனவு காண்பதன் மூலம் உயரலாம், பள்ளிப்படிப்பு மிக அவசியம் என்பது குறித்து பேசினார். பின்னர் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.செயலர் முருகேசன், பொருளர் கவிதா, முதல்வர் ராஜஸ்ரீ உள்பட பலர் முன்னதாக குத்துவிளக்கேற்றினார்கள்.

ராயல் இண்டர்நேஷனல் சி. பி.எஸ்.சி பள்ளியின் 15ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் கொண்டாடப்பட்டது .தாளாளர் அன்பழகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கோகிலா பங்கேற்று, மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதயை ஏற்று, வாழ்த்தி பேசினார்.

ஒலிம்பிக் தீபம் ஏந்தி வரப்பட்டு, அதற்கு அனைவரும் மரியாதை செலுத்தினர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதந்திர சிறகுகள் ,நம்பிக்கை,இராணுவ வீரர்களின் சேவை மனப்பான்மை போன்ற தலைப்புகளில் குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் கராத்தே ,யோகா, உடற்பயிற்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

பள்ளியின் நான்கு அணிகளான ஆகாஷ், அக்னி , ஜல்,ஹவா இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகளும், கேடயம் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன .நாளைய பசுமைப் புரட்சியாக, 1400 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருந்தினரால் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

பள்ளியின் செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்தன், முதல்வர் அனிதா ஆன்ட்ரூ, பள்ளியின் குழு உறுப்பினர்கள், ஸ்ரீ வாரி அறக்கட்டளையின் அங்கத்தினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் பங்கேற்றனர். 


Tags:    

Similar News