அதிக விலைக்கு அரசு மது விற்றதாக ஒருவர் கைது

குமாரபாளையத்தில் அரசு மதுவை அதிக விலைக்கு விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-04-01 16:30 GMT

பைல்படம்

குமாரபாளையத்தில் அரசு மதுவை அதிக விலைக்கு விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் பகுதியில் அதிக விலைக்கு மது விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்குச்சென்று  சோதனை மேற்கொண்டபோது, ஒருவர் அரசு மதுவை, அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. கையும் களவுமாக பிடித்து, அவரிடமிருந்து 8 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராபர்ட்( 45) என்பது தெரியவந்தது. இது குறித்து  குமாரபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து  கைது செய்தனர்.

Tags:    

Similar News