இலவச வீட்டுமனை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

குமாரபாளையத்தில் இலவச வீட்டுமனை கேட்டு மாற்றுத்திறனாளிகள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.;

Update: 2023-04-05 07:45 GMT

குமாரபாளையத்தில் இலவச வீட்டுமனை கேட்டு மாற்றுத்திறனாளிகள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

குமாரபாளையத்தில் இலவச வீட்டுமனை கேட்டு மாற்றுத்திறனாளிகள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நாமக்கல் மாவட்டம் அமைப்பு குழுவின் சார்பில் மாவட்டத்தில் உள்ள, எட்டு தாலுக்கா அலுவலகத்தில் வழங்கப்பட்டது. வீட்டு மனை இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை கேட்டும் காலி நிலத்தில் வீடு கட்டிக் கொடுக்கவும், குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டும் 350 க்கு மேற்பட்ட மனுக்கள் தாலுக்கா அலுவலகங்களில் வழங்கப்பட்டது.

இதில் முருகேசன், ரங்கசாமி, சக்திவேல், பராசக்தி, ராணி, சுந்தர், சண்முகம்,சண்முகம், சிவராஜ், சுப்ரமணி, அருண்குமார், துரைசாமி, பாஸ்கர் முருகேசன், சந்திரசேகரன், பழனிசாமி, பழனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப்பட்டா வழங்கும் பொருட்டு, நடைமுறையிலுள்ள நில ஒப்படை முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகளை சேர்த்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக வீட்டுமனைப் பட்டா கோரும் மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை பெற்று, அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை யின் விவரத்தினை அரசுக்கு உடன் அனுப்பி வைக்குமாறு மாவட்ட கலெக்டர்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News