குமாரபாளையம் நகராட்சியில் பகுதி சபா கூட்டம்
குமாரபாளையத்தில் நகராட்சி பகுதி சபா கூட்டம் நடந்தது;
குமாரபாளையம் 31வது வார்டில் நடைபெற்ற பகுதி சபா கூட்டம்
குமாரபாளையத்தில் நகராட்சியில் பகுதி சபா கூட்டம் நடந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, குமாரபாளையம் நகராட்சியில் பகுதி சபா கூட்டம் 33 வார்டுகளிலும் நடைபெற்று வருகிறது. 31 வது வார்டு பகுதி சபா கூட்டம், பகுதி சபா தலைவரும், நகராட்சி தலைவருமான விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது.
இதில் வார்டு குழு செயலாளர் துப்புரவு ஆய்வாளர் ஜான் ராஜா, பகுதி சபா செயலாளர் பாலமாதப்பா பங்கேற்று, வார்டுகளுக்கான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் குறைபாடுகள் குறித்து பொதுமக்களின் கருத்துகள் கேட்டு தீர்மானம் பதிவு செய்தனர்.
இக்கூட்டத்தில் விஜய்கண்ணன் பேசியதாவது: 31 வது வார்டு பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி செலுத்த வேண்டிய வரிகளை நிலுவையின்றி செலுத்தி, நகராட்சி சுகாதாரத் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதில் 31வது வார்டு பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
மழைநீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் தனியார் நிதி உதவி
குமாரபாளையம் 15 வது வார்டு குள்ளங்காடு கலைவாணி தெருவில் சிறுபாலம் அமைத்து மழை நீர் வடிகால் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டது. திட்டத்திற்கு பொதுமக்களின் பங்களிப்பு தொகையான ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையை அப்பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி டெக்ஸ்டைல்ஸ் நாகராஜ் என்பவர் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் முன்னிலையில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணிடம் வழங்கினார். நகர மன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜன், ஜேம்ஸ், அழகேசன், வேல்முருகன், திமுக நிர்வாகிகள் செந்தில்குமார், கந்தசாமி, விக்னேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.