மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிருக்கு பாராட்டு!

மக்கள் நீதி மய்யம் சார்பில் சிறந்த முறையில் சேவை செய்த மகளிருக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;

Update: 2023-11-20 00:30 GMT

படவிளக்கம் : மக்கள் நீதி மய்யம் சார்பில் சிறந்த முறையில் சேவை செய்த மகளிருக்கு சிவகாசி மேயர் சங்கீதா நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் சிறந்த முறையில் சேவை செய்த மகளிருக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் நிறுவனர் கமலஹாசன் பிறந்த நாள் விழா பல பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் ஒரு கட்டமாக சிவகாசி நற்பணி இயக்கம் சார்பில்,சிறப்பாக சேவை செய்தவர்களுக்கு நடந்த விருது வழங்கும் விழாவில், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் சித்ரா, பள்ளிபாளையம் அமைப்பாளர் மல்லிகா, மதுரை உமையாள் பத்மாவதி, பாண்டிச்சேரி பானுமதி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த மகளிருக்கு சிவகாசி மேயர் சங்கீதா பங்கேற்று, விருதுகள் வழங்கி பாராட்டினார். இதில் ரத்ததான முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள், அரசு மருத்துவமனைக்கு சின்டெக்ஸ் வாட்டர் டேங்க் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் கிழக்கு காலனியில் ஜோ மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் நடராஜன். இவர் பல வருடங்களாக பலருக்கு தன்னால் ஆன உதவிகளை மாணவ, மாணவியர்களுக்கு செய்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக 100 பெண் குழந்தைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய், செல்வமகள் திட்டத்தில் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி வாழ்த்தினார். இதற்கான விழாவில் மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News