பாலிடெக்னிக் கல்லூரி வளாக நேர்காணலில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை
அரசு உதவி பெறும் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன உத்தரவு வழங்கும் விழா நடைபெற்றது;
குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன உத்தரவு வழங்கும் விழா நடைபெற்றது.
குமாரபாளையத்தில் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன உத்தரவு வழங்கும் விழா நடைபெற்றது.
குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம் பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரி வளாகத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு நியமன உத்தரவு வழங்கும் விழா நடைபெற்றது.
குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரியில் 43வது ஆண்டுவிழா கல்லூரி தலைவர் இளங்கோ தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள் தொழிற்சாலைகளில் எவ்வாறு தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். ஈரோடு ஜான்சன் கிளாத்திங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கந்தசாமி பங்கேற்று பேசுகையில், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பத்தினை இன்றைய சூழலில் எவ்வாறு கையாளுவது என்பது பற்றி பேசினார்.
கல்லூரியின் துணை தலைவர் ஈஸ்வர் மற்றும் தாளாளர் புருசோத்தமன், குமாரபாளையம் சிட்ரா பவர்லூம் சர்வீஸ் சென்டர் நிர்வாகி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள். இதில் 107 மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாணவர்களும், தொழில் நிறுவன உரிமையாளர்களுமான உடுமலைப்பேட்டை பாலசுப்ரமணியம், ராசிபுரம் சுவாமிநாதன், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி நிர்வாகிகள் புருஷோத்தமன், ஈஸ்வர் பரிசு வழங்கினர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி, ஆசிரியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி ஆகியோர் செய்திருந்தனர்.