குமாரபாளையம் நகராட்சியில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதி ஏற்பு

குமாரபாளையம் நகராட்சியில் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2023-08-11 14:30 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

குமாரபாளையத்தில் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடுஅரசு சார்பில் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி ,கல்லூரி சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி, விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நகராட்சி அதிகாரிகள், அன்பு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் பெருமாள் ,கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம், தலைவர் சீனிவாசன் , துணை முதல்வர் மஞ்சுளா மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் திடக்கழிவுகள், மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்கள் வாங்கி வருகிறார்கள். குப்பை களை அகற்ற போதிய வாகனங்கள் இல்லாததால், குப்பை அகற்றுவது சம்பந்தமாக நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல புகார்கள் கூறி வந்தனர்.

இதனால்திடக்கழிவுகள் சேகரிக்க புதியதாக  நான்கு வாகனங்கள் வாங்கப்பட்டன. இவைகளை நேற்று நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆணையாளர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் வள்ளியம்மாள், சுகாதார ஆய்வாளர்கள் சந்தானகிருஷ்ணன், ஜான் ராஜா, உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News