முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு
குமாரபாளையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலம் நடந்தது;
குமாரபாளையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மவுன ஊர்வலம் நடந்தது.
தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக குமாரபாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நகர செயலாளர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது.
இது ஆனங்கூர் பிரிவு சாலையில் தொடங்கி, காவல் நிலையம் வழியாக பயணியர் மாளிகை வரை சென்று, அங்கு அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் புருஷோத்தமன், நகர துணை செயலர் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, அர்ச்சுனன், உள்பட பலர் பங்கேற்றனர்.