அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்
குமாரபாளையம் அருகே அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள 37 ஆயிரத்து 576 தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா நடத்திட உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன்படி வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். கணித ஆசிரியை ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகள், கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பி.டி.ஏ. நிர்வாகி நாச்சிமுத்து பரிசுகள் வழங்கினார்.
இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அய்யா சாமி, சின்னப்ப நாயக்கன் பாளையம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, வேமன் காட்டுவலசு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை விஜய சாமுண்டீஸ்வரி, ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சேகர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மணிமேகலை தட்டாங்குட்டை வார்டு உறுப்பினர் நாகராஜ், விடியல் ஆரம்பம் பிரகாஷ், பஞ்சாலை சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் பங்கு பெற்றனர். ஆசிரியர் சந்தான லட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாதேசு, பார்வதி, உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன ஆசிரியர் முத்து நன்றி கூறினார்.