காற்று ஒலிப்பான்களை பயன்படுத்த கூடாது:மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை

குமாரபாளையத்தில் பேருந்து மற்றும் டெம்போ ஓட்டுனர்கள் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறித்தப்பட்டுள்ளது;

Update: 2023-08-31 12:15 GMT

மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் குமாரபாளையம் பகுதியில் ஏர் ஹாரன் பயன்படுத்திய வாகனங்களை ஆய்வு செய்து அவற்றை அகற்றினார் 

குமாரபாளையத்தில் பேருந்து மற்றும் டெம்போ ஓட்டுனர்கள் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என மோட்டார் வாகன ஆய்வாளர் அறிவுறுத்தினார்.

மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் குமாரபாளையம் பகுதியில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தும் பேருந்து, மினி பேருந்து, டெம்போ, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்.

காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தி வந்த வாகன ஓட்டிகளிடம், காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்த அரசு தடை விதித்து உள்ளது என்றும், அதற்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்திய வாகன ஓட்டுனர்களிடம் , இனி காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்த மாட்டேன் என ஒப்புதல் கடிதம் பெற்றார். பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை உள்ளிட்ட பல இடங்களில் இந்த ஆய்வு நடந்தது.

ஓட்டுநர் சங்கங்களின் தொடர் போராட்டங்களின் பலனாய் மாவட்ட கலெக்டர் உமாவின் உத்தரவின் பேரில்,  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகளிலும் ஓட்டுநர்களின் குறைகளை கேட்பதற்கான கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், சிற்றுந்து ஓட்டுநர்கள், பாரம் ஏற்றும் வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி, வாகன தணிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. குமாரபாளையம் எடப்பாடி சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். நாமக்கல் மாவட்டத்தில் வர அனுமதி பெறப்படாத, விதி மீறிய 6 வெளியூர் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இரண்டு மணல் லாரிகள் பிடிபட்டன. இதில் ஒரு லாரிக்கு 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொரு லாரிக்கு பர்மிட், எப்.சி., வரி, ஆகியன ஏதும் செலுத்தப்படாததால் லாரி சிறை பிடிக்கப்பட்டது.


Tags:    

Similar News