காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம்

குமாரபாளையத்தில் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2023-07-10 01:00 GMT

குமாரபாளையத்தில் நடந்த காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அன்றாட நிகழ்வுகளாக மனித உரிமை மீறல் குற்றங்களும், ஜனநாயக நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து செயல்படும் அராஜக செயல்பாடுகளும், தங்கு தடையின்றி எத்தகைய பயமும், கூச்சமும் இல்லாமல் பரவலாக நடந்து வருகிறது.

உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தங்களுடைய பல்வேறு தீர்ப்புகளில் மனித உரிமை மீறல், சட்ட உரிமை மீறல் குற்றங்களை நிரூபித்து, சாதாரண ஏழை அப்பாவி மக்கள் சந்திக்கும் மோசமான துயரங்களை அம்பலப்படுத்தி, அதனை தடுத்து நிறுத்திட, காவல் நிலையங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிகளையும், உருவாக்கி, அமல்படுத்திட மத்திய  மாநில ஆட்சியாளர்களுக்கு கடுமையான தாக்கீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம், மாநிலம் தழுவிய அமைப்பாக உருவாகியுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் குமாரபாளையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து அரசியல் கட்சிகள், ஜனநாயக முற்போக்கு சக்திகள், சமூக செயல்பாட்டாளர்கள், தொழிற்சங்க அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கூட்டத்தை கார்த்திகேயன், சக்திவேல், ஆறுமுகம் உள்பட பலர் ஒருங்கிணைத்தனர்.




Tags:    

Similar News