முன்னாள் முதல்வர் பிறந்த நாளில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி, குமாரபாளையம் மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு அதிமுக சார்பில் மோதிரம் அணிவித்தனர்;

Update: 2023-05-12 12:15 GMT

முன்னாள் முதல்வர் பிறந்த நாளையொட்டி, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.

முன்னாள் முதல்வர் பிறந்த நாளையொட்டி, குமாரபாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று பிறந்த பெண் குழந்தைக்கு முன்னாள் அமைச்சர் தங்க மோதிரம் அணிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையொட்டி நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில், குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் அனைத்து வார்டுகளில் கொடியேற்றி வைத்து இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டன.  குமாரபாளையம் ஜி.ஹெச்.ல், குமாரபாளையம் காந்திபுரத்தை சேர்ந்த விவேக், கலைவாணி தம்பதியருக்கு நேற்று பிறந்த பெண் குழந்தைக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி தங்கமோதிரம் அணிவித்து வாழ்த்து கூறினார். இதில் தங்கமணியின் புதல்வர் தரணி, நிர்வாகிகள் துணை செயலர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் புருஷோத்தமன், அர்ஜுனன், ரவி, சிங்காரவேல், உள்பட பலர் பங்கேற்றனர்.

இதே போல் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் பள்ளிபாளையம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய செயலர்கள் செந்தில், குமரேசன், தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, கவுசல்யா, மனோகர் உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News