மகளிர் உரிமைத்தொகை பெற வங்கி, அஞ்சலத்தில் கணக்கு தொடக்கம்
குமாரபாளையத்தில் மகளிர் உரிமை தொகை பெற வங்கி மற்றும் அஞ்சல் துறை சார்பில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது.;
குமாரபாளையத்தில் மகளிர் உரிமை தொகை பெற வங்கி, அஞ்சல் கணக்கு தொடங்கும் பணி நடைபெற்றது
குமாரபாளையத்தில் மகளிர் உரிமை தொகை பெற வங்கி மற்றும் அஞ்சல் துறை சார்பில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்ததை யடுத்து, அதற்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டது. பயனாளிகளுக்கு பணம் அனுப்ப வங்கி மற்றும் அஞ்சல் துறை சேமிப்பு கணக்கு துவக்கும் பணி நேற்று குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் நடந்தது. தாலுக்கா அளவிலான பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி சேமிப்பு கணக்கு தொடங்கினார்கள்.
இது குறித்து தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது: மகளிர் உரிமை தொகை பெற விண்ணபித்த விண்ணப்பதாரர்களில் பலர் வங்கி கணக்கு எண், கொடுத்திருந்தார்கள். அந்த வங்கியில் நீண்ட காலமாக வரவு செலவு வைக்காத காரணத்தால் பெரும்பாலான வங்கி கணக்குகள் செயல்படாத நிலையில் இருந்தன. அதனால் அப்படிப்பட்ட நபர்களுக்கு தாலுக்கா அலுவலகத்தில் வங்கி மற்றும் அஞ்சல் துறை மூலம் சேமிப்பு கணக்கு துவக்கும் முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று சேமிப்பு கணக்கு துவக்கி பயன்பெற்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பயிற்சி முகாம் குமாரபாளையம் தனியார் கல்லூரியில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் இதற்கான பயிற்சி வழங்கினர். இதில் குமாரபாளையம், பள்ளிபாளையத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயலாக்கம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகள் முடிவடைந்தன. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வரும் 15 -ஆம் தேதி உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடக்கி வைக்கிறார்.