அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி

குமாரபாளையத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியானார்.

Update: 2021-10-28 05:15 GMT

பெரியசாமி

ஈரோடு மாவட்டம், இட்டேரி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி, 40. கூலி தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை 04:00 மணியளவில்,  வட்டமலை, சேலம்  - கோவை புறவழிச்சாலையில் நடந்து சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சேலம் பக்கம் இருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி,  பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே, பெரியசாமி உயிரிழந்தார்.

இது குறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். பெரியசாமிக்கு திருமணம் ஆகி ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

Similar News