குமாரபாளையம் அருகே புலம்பெயர் தொழிலாளர்களான காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

குமாரபாளையம் அருகே உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவில் புலம்பெயர் தொழிலாளர்களான காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.;

Update: 2023-11-18 03:03 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் குமாரபாளையம் உயர்தொழில்நுட்ப பூங்கா செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள ஒரு நிறுவனத்தில் வடமாநிலங்களை சேர்ந்த 15 குடும்பத்தினர்கள் தங்கி, பணியாற்றி வருகிறார்கள்.

இதில் ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த திம்பு மாஜி,22, பீகார் மாநிலத்தை சேர்ந்த கோமல் குமாரி, 18, ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று அதிகாலை 03:00 மணியளவில் இவர்கள் தங்கியிருந்த அறையில் காணாமல் போனதாக, நிறுவன மேலாளர் விஜிநாதனிடம் கூறிவிட்டு, ஈரோடு ரயில் நிலையம் சென்று பார்த்து வர சிலர் சென்றனர். நேற்று பகல் 12:00 மணியளவில், அதே மில்லில் பணியாற்றும் ஆதித்யதாஸ் என்பவர், கழிப்பிடம் செல்ல வேண்டி, காலி இடத்தில் சென்ற போது, அங்கிருந்த வேப்ப மரத்தில் காதலர்கள் இருவரும் ஒரே துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

இதனை கண்டதும், அதே மில்லில் பணியாற்றும் இறந்த பெண்ணின் மூத்த சகோதரி சாலோ குமாரியை, அந்த இடத்திற்கு அழைத்து சென்று காட்டினர். இருவரது சடலங்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மொபைல் போன் திருடியதாக கல்லால் தாக்கிய இருவர் கைது

குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் நிர்மல் கிரிஸ்டோபால், 33. விசைத்தறி கூலி. நேற்றுமுன்தினம் பகல் 12:45 மணியளவில், இவர் பணியாற்றும் விசைத்தறி பட்டறை எதிரில் டூவீலரில் வந்த ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இவரை காப்பாற்ற சென்ற போது, அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும், ராஜ்குமார், 30, இவரது நண்பன் கவுதமன், 25, இருவரும் சேர்ந்து அவரை காப்பாற்றி அனுப்பி வைத்தனர்.

அப்போது ராஜ்குமாரின் மொபைல் போன் காணவில்லை. அதை நிர்மல் கிரிஸ்டோபால் தான் எடுத்து இருப்பான் என, கவுதமன் சொல்ல, நிர்மலிடம் கேட்டு, இருவரும் கல்லால், கைகளால் தாக்கியதில் நிர்மல் பலத்த காயமடைந்தார். இவர் குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய, குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, ராஜ்குமார், கவுதமன் இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News