பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நடமாடும் எக்ஸ்ரே வாகனம்
Namakkal News Today -குமாரபாளையத்தில் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.;
குமாரபாளையத்தில் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
Namakkal News Today -தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் நகரம் மாரக்காள்காடு, கலைமகள் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு காசநோய் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட அதி நவீன எக்ஸ்ரே வாகனம் மூலம், சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
இந்த ஆய்வில் நாமக்கல் மாவட்ட காசநோய் துறை இணை இயக்குனர் டாக்டர் வாசுதேவன், டாக்டர் ரேணுகாதேவி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கபில், மற்றும் முதுநிலை மேற்பார்வையாளர்கள் அருள்மணி, பார்த்தசாரதி உள்பட செவிலியர்கள் பலரும் பங்கேற்றனர்.
வட்டார சுகாதார பேரவை நிகழ்ச்சி
பள்ளிபாளையம் நகராட்சி சமுதாய கூடத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வட்டார சுகாதாரத்துறை ஏற்பாட்டின் பேரில் வட்டார சுகாதார பேரவை கலந்தாய்வு கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவி தலைமையில் நடைபெற்றது.
குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், பள்ளிபாளையம் நகராட்சி சேர்மன் செல்வராஜ், பள்ளிபாளையம் நகராட்சி துணை தலைவர் பாலமுருகன், படைவீடு பேரூராட்சி தலைவி ராதாமணி செல்வன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
வட்டார அளவில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு, சித்த மருத்துவத்துறை, காச நோய் தடுப்பு பிரிவு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம், அங்கன்வாடி மையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் சுகாதார திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துக்களின் வகைகள், தானியங்களால் ஆன உணவு பொருட்கள், மருத்துவத்துறை மூலம் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், ஊக்கத்தொகைகள் பற்றிய விளக்க கையேடுகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. டாக்டர்கள் செந்தாமரை, திவ்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரம்
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடியில் கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது பற்றி தலைமை டாக்டர் பாரதி கூறுகையில், குமாரபாளையம் ஜி.ஹெச்.இல் 1.5 கோடியில் விபத்து மற்றும் அவரச சிகிச்சை தனி பகுதி கூடுதல் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் வகை படுத்துதல் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, ஐ.சி.யூ. எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை முதல் தளத்தில் அமைக்கப்படவுள்ளது. ஜி.ஹெச். நுழைவுப்பகுதியில் சில தற்காலிக கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் அவைகளை அகற்றியதால் ஜி.ஹெச் பகுதி தூய்மையாக உள்ளது எனக் கூறினார்.
இலவச ஹோமியோ ஆலோசனை முகாம்
குமாரபாளையத்தில் இலவச ஹோமியோ ஆலோசனை முகாம் நகராட்சி பூங்கா எதிரில் நடைபெற்றது. ஜானு ஹோமியோ கிளினிக் மற்றும் சேவை சங்கத்தார் சார்பில் நடைபெற்ற இம்முகாமில் டாக்டர்கள் ஜனனி, இந்திரா, தமிழரசு மற்றும் குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு சர்க்கரை வியாதி, சிறுநீரக கோளாறு, தைராய்டு, ஆஸ்துமா, தோல் வியாதிகள், நரம்பியல் நோய்கள், குழந்தையின்மை, கர்ப்பபை நீர் கட்டிகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆலோசனை மற்றும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர். இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலமாக ஆய்வு செய்ததில், நாமக்கல் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 201 குழந்தைகள் வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவு தன்மை ஆகிய குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மே 24 முதல் ஒரு மாதத்திற்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, இது போன்ற குழந்தைகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக குமாரபாளையம் கண்ணகி நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதி சான்று குழுவினர் ஆய்வு
குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தரச் சான்று 2ம் கட்ட ஆய்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இது குறித்து தலைமை டாக்டர் பாரதி கூறுகையில், நாமக்கல் சுகாதார இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில், மண்டல அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட தேசிய தர உறுதி சான்று குழுவினர் பிப். 13ல் முதற்கட்ட ஆய்வு செய்தனர். தற்போது தேசிய தரச்சான்று மண்டல அலுவலர் டாக்டர் அசோக் தலைமையிலான குழுவினர் 2ம் கட்ட ஆய்வு செய்ததுடன், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு பயிற்சியும் வழங்கினர்.
ஜி.ஹெச்., ல் எத்தனை டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் உள்ளனர்? சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது? மொத்தம் இருக்கும் படுக்கை வசதி எத்தனை? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்டனர். . ஆய்வுக்கு வந்த டாக்டரிடம் அனைவரும் சேர்ந்து, தூய்மை பணியாளர்கள் நியமித்து உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2