பள்ளத்தில் இறங்கிய கிரானைட் லோடு ஏற்றி வந்த லாரி
குமாரபாளையம் அருகே கிரானைட் லோடு ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் இறங்கி விபத்துக் குள்ளானது;
குமாரபாளையம் அருகே கிரானைட் லோடு ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
குமாரபாளையம் அருகே கிரானைட் லோடு ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் இறங்கி விபத்து
குமாரபாளையம் அருகே சேலம், கோவை புறவழிச்சாலையில், நேற்று காலை 11:00 மணியளவில் கிரானைட் லோடு ஏற்றி வந்த லாரி, கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் அருகே பள்ளத்தில் சாய்ந்தது. இதன் ஓட்டுனர் எவ்வளவோ முயற்சித்தும், லாரி சாலையின் மேலே ஏற முடியவில்லை.குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்ததில், கிரானைட் லோடு ஆந்திரா மாநிலம், குண்டூரில் இருந்து, கோவைக்கு சென்றது தெரிய வந்தது. இதன் ஓட்டுனர் சென்னையை சேர்ந்த பாலாஜி, 58, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். பொக்லின் உதவியுடன் லாரி பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
மனநலம் பாதித்த நபர் நிலைதடுமாறி விழுந்து மரணம்
ஈரோடு மாவட்டம், அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தவர் சுப்பிரமணியம், 75. மன நலம் பாதித்தவர் என கூறப்படுகிறது. இவர் மே 12ல் வீட்டை விட்டு வெளியில் வந்தவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மே 23ல் கருங்கல்பாளையம் போலீசில் இவர் காணாமல் போய்விட்டார் என இவரது உறவினர் நாகநாதன் புகார் செய்துள்ளார்.
மே 13ல் சுப்பிரமணியம் கோட்டைமேடு பாலம் பகுதியில் வந்தவர், நிலை தடுமாறி கீழே விழுந்ததால், அக்கம் பக்கத்தினர் இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்ன அங்கிருந்து மேல் சிகிச்சைகாக ஈரோடு மற்றும் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவர் சிகிச்சை பலனின்றி மே 18ல் இறந்தார். இது குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல் பரவ செய்ததின் பலனாக, நாகநாதன், இதனைப்பார்த்து குமாரபாளையம் போலீசில் இது குறித்து புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி விசாரணை செய்து வருகிறார்.