கருணாநிதி நூற்றாண்டு விழா இலவச மருத்துவ முகாம்
குமாரபாளையத்தில் கருணாநாதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடந்தது.;
குமாரபாளையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு அரசு கைத்தறி துறை சார்பில் திருச்செங்கோடு சரக கைத்தறி துறை உதவி இயக்குனர் பழனிக்குமார் தலைமையில்இலவச மருத்துவ முகாம் நடந்தது. அரவிந்த் மருத்துவமனை டாக்டர் குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு சிகிச்சை செய்தனர்.
நகராட்சி தலைவர் விஜய் கண்ணன், துணை தலைவர் வெங்கடேசன், தி.மு.க. நகர செயலர்கள் செல்வம், ஞானசேகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜானகிராமன், தங்கராஜ், சிவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். நுரையீரல் பரிசோதனைகள், கண் பரிசோதனை, எலும்பு மற்றும் மூட்டு வலி, பொது மருத்துவம், உடல் பருமன், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. பரிசோதனை, சிறுநீர், மகளிர் சுகாதாரம் உள்ளிட்ட சிகிச்சைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.