குமாரபாளையம் ராயல் பள்ளியில் நடந்த நீட் தேர்வில் 64 பேர் ஆப்சென்ட்

குமாரபாளையம் ராயல் பள்ளியில் நடந்த நீட் தேர்வில் 64 பேர் தேர்வெழுத வரவில்லை.

Update: 2022-07-17 13:15 GMT

குமாரபாளையம் ராயல் பள்ளியில் நடந்த நீட் தேர்வில் முன்னதாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு மாணவ, மாணவியர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் மாணவர்கள் 476 பேர், மாணவிகள் 748 பேர், ஆக மொத்தம் ஆயிரத்து 224 பேர் தேர்வு எழுத நிர்ணயம் செய்யபட்டிருந்தது.

இதில் மாணவர்கள் 25 நபர்களும், மாணவிகள் 39 நபர்களும் வரவில்லை. ஆக மொத்தம் 64 பேர் அப்சென்ட் ஆகியிருந்த நிலையில் ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுதினார்கள். காலை 11:00 மணி முதலாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு மையத்திற்குள் மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். மொபைல் போன், ஹெட் போன், பேனா, பென் டிரைவ், பேப்பர்கள், தின்பண்டங்கள், நகைகள், வாட்ச், கூலிங் கிளாஸ், கேமெரா, கால்குலேட்டர், பர்ஸ், நோட்புக் ஆகியவை அனுமதி மறுக்கப்பட்டது.

Tags:    

Similar News