மது விற்ற 5 நபர்கள் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்
குமாரபாளையத்தில் அரசு அனுமதி இல்லாமல் மது விற்ற 5 நபர்கள் கைது செய்யப்பட்டு, 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன;
குமாரபாளையத்தில் அரசு அனுமதி இல்லாமல் மது விற்ற 5 நபர்கள் கைது
குமாரபாளையத்தில் அரசு அனுமதி பெறாமல் மது விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.க்கள் சந்தியா, முருகேசன், டேவிட், குணசேகரன், உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ராஜம் தியேட்டர், வட்டமலை, கோட்டைமேடு, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட பகுதியில் மது விற்பது அறிந்து, நேரில் சென்ற போலீசார் கனகரத்தினம், 67, கோவிந்தசாமி, 42, கிருஷ்ணன், 42, பெருமாள், 52, சுந்தரராஜ், 61 ஆகியோர் தங்கள் பெட்டிக்கடைகளில் மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர். இவர்கள் ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
டூவீலர்கள் மோதிய விபத்தில்விசைத்தறி கூலி தொழிலாளி பலி
குமாரபாளையம் ஆனங்கூர் சாலை காந்தி நகரில் வசிப்பவர் நல்லதம்பி, 52. விசைத்தறி கூலி. இவர் நேற்றுமுன்தினம் இரவு 07.25 மணிக்கு, கோட்டைமேடு பகுதியில் டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில், தன் மனைவி அமுதாவை பின்னால் உட்கார வைத்துகொண்டு சென்று கொண்டிருந்தார். முன்னால் சென்ற எச்.எப். டூவீலர் ஓட்டுனர் எதிர்பாராத விதமாக வலது புறம் திருப்ப, இவரது டூவீலர் மீது மோதியதில், இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அழைத்து வந்த போது, இவர்களை பரிசோதித்த டாக்டர் நல்லதம்பி வழியில் இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து அமுதா கொடுத்த புகாரின் படி, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான டூவீலர் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
கருத்து வேறுபாட்டால் பிரிந்த மனைவியை,மாமனாரை தாக்கிய மருமகன், மைத்துனர் கைது
சேலம் லைன் மேடு பகுதியில் வசிப்பவர் நித்யா, 21. இவருக்கும், குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் வசிக்கும் சுரேஷ், 34, என்பவருக்கும் சில ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் தனது ஆடைகளை எடுப்பதற்காக சுரேஷ் வீட்டிற்கு நித்யா வந்தார். அப்போது தகாத வார்த்தை பேசியதுடன், ஆடைகள் தர முடியாது என்றும், கையால் தாக்கியுள்ளார். இவரது சகோதரர் செந்தில்குமார், நித்யாவின் அப்பாவை தாக்கினார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுக்கப் பட்டது. இதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷ், செந்தில்குமார் இருவரையும் கைது செய்தனர்.\இதே போல் நித்யா தரப்பினர் தாக்கியதாக சுரேஷ் தரப்பினர் புகார் கொடுக்க, இரு தரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது.
_________________________________________________________________________________________