டாஸ்மாக் கடையில் போலி மது பாட்டில்கள் விற்ற 3 பேர் கைது; மூவர் தலைமறைவு
பள்ளிபாளையம் அருகே டாஸ்மாக் கடையில் போலி மது பாட்டில்கள் விற்ற மூன்று நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 3 பேர் தலைமறைவாகினர்.;
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே டாஸ்மாக் கடையில் போலி மது பாட்டில்கள் விற்ற மூன்று நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 3 பேர் தலைமறைவாகினர்.
பள்ளிபாளையம் எஸ்.பி.பி. கீழ் காலனி அரசு மதுபானக்கடையில் போலி மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக தகவல் போலீசாருக்கு கிடைத்தது. நேரில் சென்ற இன்ஸ்பெக்டர் சுகுமார், மற்றும் போலீசார் 232 போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து, அதே பகுதியை சேர்ந்த கடை ஊழியர்கள் அசோக், (36), சங்கர், (29), விக்னேஷ், (30), ஆகிய மூவரை கைது செய்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட மதன்குமார், ஈஸ்வரன், கடை உரிமையாளர் குகணேஷ் ஆகிய மூவரும் தலைமறைவாகினர். இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.