கேரளா மாநில லாட்டரி விற்ற நபர் கைது
குமாரபாளையத்தில் கேரளா மாநில லாட்டரி விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.;
பைல் படம்
குமாரபாளையத்தில் கேரளா மாநில லாட்டரிவிற்ற நபர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் தம்மண்ணன் வீதியில் அரசு தடை செய்த வெளிமாநில லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் நேற்று மாலையில் அப்பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரிடமிருந்த 7 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்த போலீசார், இதனை விற்ற அதே பகுதியை சேர்ந்த லோகநாதன்(77 ) என்பவரை கைது செய்தனர்.
தமிழகத்தில் 20 ஆண்டுகளாக நீடித்து வரும் தடை..
தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது முதல் தற்போது வரை சுமார் 20ஆண்டுகளாக தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு அனுமதி கிடையாது. இடையே கடந்த 2006ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக வந்த போது லாட்டரி சீட்டு விற்பனை மறுபடியும் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. லாட்டரி வியாபாரத்தில் மன்னன் என்று கூறப்படும் மார்ட்டின் அப்போது கலைஞர் குடும்பத்திற்கு மிக நெருக்கமாக இருந்தார். மேலும் முதலமைச்சராக இருந்த கலைஞரின் கதை வசனத்தில் லாட்டரி மார்ட்டின் திரைப்படமே தயாரித்தார்.
இவற்றை எல்லாம் வைத்து கலைஞர் ஆட்சியில் மறுபடியும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கலைஞர் ஆட்சி முடியும் வரை மார்ட்டின் எவ்வளவோ முயன்றும் அவரால் தமிழகத்தில் லாட்டரி விற்பனையை கொண்டு வர முடியவில்லை. இதனிடையே அதன் பிறகு அதிமுக அரசு சுமார் பத்து வருட காலம் ஆட்சியில் இருந்த போதும் லாட்டரி விற்பனைக்கு மார்ட்டினால் அனுமதி பெற முடியவில்லை. இந்த நிலையில் மறுபடியும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் லாட்டரி விற்பனைக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது முதல் தற்போது வரை சுமார் 20 ஆண்டுகளாக தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு அனுமதி கிடையாது. இதனிடையே தமிழக அரசு மிகுந்த பொருளாதார நெருக்கடியில் உள்ளது. தற்போது அமலில் உள்ள திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்ததே தமிழகத்திடம் நிதி இல்லை. டாஸ்மாக் கடைகளை சார்ந்தே தமிழக அரசு இயந்திரம் இயங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் இந்த நிதி ஆதாரங்கள் போதாது. மேலும் கடன்களையும் வாங்க முடியாது. எனினும் லாட்டரி விற்பனையை அனுமதிப்பது தொடரக்பாக திமுக அரசு எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை.