சுதந்திர பேராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் -முதல்வர்

சுதந்திர பேராட்ட வீரர் பொல்லானுக்கு திருவுருவ சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.

Update: 2021-02-15 13:40 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று அதிதமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் அருந்ததியர் ஆதரவு மாநாடு நடைப்பெற்றது. இதில் தமிழக முதல்வர் பழனிச்சாமி, மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அருந்ததியர் சமுதாயத்தை அடையாளம் காட்டினார். அவர் வழியில் செயல்படும் இந்த அரசு அருந்ததியருக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 82 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கி பட்டியலின மக்கள் பல தொழில்கள் செய்து வாழ்க்கையில் ஏற்றம் பெற இந்த அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருவதாகவும், சொந்த வீடு இல்லாத 50 ஆயிரம் பட்டியிலன மக்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் எனவும் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 17 இலட்சம் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. 2013 முதல் 2018 வரை பட்டியலின மாணவர்கள் உயர்கல்விகள் பயில 3952 கோடி ரூபாய் கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் மக்களுக்காக கட்டணமில்லா கழிப்பிட வசதி, காங்கீரிட் சாலை அமைத்து தரப்படும்.

சுதந்திர பேராட்ட வரலாற்றில் கொங்கு மண்டலத்திற்கு தனி பெருமை உள்ளது. சுதந்திர பேராட்ட வீரர் தீரன் சின்னமலை படை தளபதியாக இருந்த அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த பொல்லனுக்கு தனி சிறப்பு உள்ளது. சுதந்திர பேராட்ட வீரர் பொல்லனுக்கு தமிழக அரசு சார்பில் திருவுருவ சிலை அமைத்து மணிமண்டபம் அமைக்கப்படும். அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News