குமாரபாளையம் பள்ளியில் என்சிசி மாணவர்களிடம் அலுவலர்கள் ஆலோசனை

குமாரபாளையத்தில், நாட்டு நலப்பணித்திட மாணவர்களிடம் என்.சி.சி. அலுவலர்கள் ஆலோசனை செய்தனர்.

Update: 2021-09-29 04:30 GMT

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், என்.சி.சி. மாணவர்களிடம் ஆலோசனை  நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார்.

இது குறித்து, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அந்தோணிசாமி கூறியதாவது: ஈரோடு, 15வது பட்டாலியனை சேர்ந்த சுபேதார் மேஜர் செந்தில்குமார், சுபேதார் ராம்குமார் பள்ளிக்கு வருகை தந்து, என்.சி.சி. மாணவர்களிடம் கலந்தாலோசித்தனர். இரு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டாகி விட்டதா? விளையாட்டு பயிற்சி நடைபெறுகிறதா? என்.சி.சி. பயிற்சி முறைகள் தொடர்கிறதா?  என்று கேட்டறியப்பட்டது.


அத்துடன், பயிற்சியின் போது விடுபடாமல் வந்தவர்கள் விபரம் கேட்டறிதல், இதுவரை கற்ற பயிற்சிகளை செய்து காட்ட சொல்லுதல், என்.சி. சி. ஒரு கண் என்றால், படிக்கும் கல்வி மற்றொரு கண் என எடுத்துரைத்தல், பாடங்கள் மீதும் கவனம் செலுத்த அறிவுறுத்தல், என்.சி.சி. மாணவர்களின் தனித்திறமை குறித்து கேட்டறிதல், குடும்ப சூழ்நிலை கேட்டறிந்து மன நிலையை பக்குவப்படுத்த ஆலோசனை வழங்குதல், பயிற்சி முடிவில் என்.சி.சி. தேர்வு குறித்த முக்கியத்துவம் உள்ளிட்ட பல  விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்தனர். மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பதில் கூறி, என்.சி.சி. பயிற்சி முறைகளை செய்து காட்டியதாக, அவர் கூறினார்.

இதையடுத்து நகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் என்.சி.சி. மாணவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News