நாகை, காரைக்காலில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை அடுத்து, நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 10ம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும்.
இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி, நாகை காரைக்கால் துறைமுகங்களில் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, நேற்று மாலை ஏற்றப்பட்டது.