நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.;
நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி, குறுவை விவசாயம் செய்த விவசாயிகள் ஊடு பயிர்களான உளுந்து பயிர், பாசி பருப்பு சாகுபடியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் பருவம் தப்பி பெய்த கனமழை காரணமாக உளுந்து பயிர்கள் மழைநீர் சூழ்ந்து நாசமானது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் பாலையூர், கீழ்வேளூர், திருமருகல், கீழையூர், மீனம்பனல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்து சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் உளுந்து பயிர்கள் நாசமானது.
இந்த நிலையில் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாகை மாவட்டம் முழுவதும் பருவம் தப்பிய கனமழை காரணமாக 40 ஆயிரம் ஹெக்டேர் உளுந்து பயிர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும், விளைச்சலின் அடிப்படையில் நிவாரணம் வழங்காமல், பொது பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் மற்றும் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்/