நாகை மண்டலத்தில் உள்ள 11 பணிமனைகளில் 470 பேருந்துகள் இயக்கம்
நாகை மண்டலத்தில் உள்ள 11 பணிமனைகளில் 470 பேருந்துகள் இயக்கம் ; முக கவசம் உள்ள பயணிகள் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி.
கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் இன்று பேருந்து சேவை தொடங்கியது. நாகை மண்டலத்திற்கு உட்பட்ட 11 பணிமனைகளில் 470 பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நாகை மண்டலத்திற்குட்பட்ட வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை, நன்னிலம், காரைக்கால், திருவாரூர், உள்ளிட்ட 11 பணிகளில் இருந்து இன்று காலை 5 மணி முதலே பேருந்து சேவைகள் தொடங்கியது. குறிப்பாக நாகை பேருந்து நிலையத்தில் இன்று காலை முதல் உள் மாவட்டங்களில் பணிக்கு செல்ல கூடிய கூலி தொழிலாளர்கள் பேருந்தில் பயணித்தனர். பயணிகள் பயணிப்பதற்கு முன்பாக பேருந்துகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டதுடன், முக கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து வருகின்றனர்.