நாகையில் ரூ.12 கோடி பிரதான மழைநீர் வடிகால் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
நாகையில் ரூ.12 கோடி பிரதான மழைநீர் வடிகால் கட்டுமான பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.;
நாகையில் கனமழை காலங்களில் நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த நிலையில், அங்கு மழைநீர் வடிகால் கட்டுவதற்கு தமிழக அரசால் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, நாகை ஆபீஸ் ரோடு பகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் கட்டுமான பணிகள் பூமி பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது.
நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தனர். 5 கிலோ மீட்டர் தூரம் புதிதாக கட்டப்பட இருக்கின்ற இந்த வடிகால் கால்வாய் முழுவதும் கான்கிரீட் மூலம் உருவாக்கப்பட இருப்பதாகவும், இதனால் மழைகாலங்களில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தெரிவித்தார்.