பொறையாரில் முதல்வர் நிவாரணத்துக்கு தன்னார்வலர்கள் ரூ 1.5 லட்சம் நிதி
பூம்புகார் தொகுதி பொறையாரில் முதல்வரின் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ 1.5 லட்சத்தை எம்எல்ஏ நிவேதா முருகனிடம் தன்னார்வலர்கள் வழங்கினர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து தரப்பு மக்களும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்று பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதாமுருகனிடம் வழுவூர் நெய்குப்பை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக கண்காணிப்பாளர் சு.காளிமுத்து ரூ.50 ஆயிரமும்,
பொறையார் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் தமிழ்ச்செல்வன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.