மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த நபரை கைது செய்ய கோரி சாலை மறியல்

மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த நபரை கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்.

Update: 2021-04-11 12:47 GMT

பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பாட்ஷா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம், கொடைவிளாகம் அடுத்துள்ள தெற்கிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சம்பந்தம் மகன் பாட்ஷா என்கிற ராஜேஷ் (27). இவர் 26 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை கடந்த ஒருவருடமாக மிரட்டி பாலியல் ரீதியில் தொல்லை அளித்து வந்துள்ளார். தற்போது அந்த பெண் 7 மாத கர்ப்பிணியாகியுள்ளதை அறிந்த பெண்ணின் பெற்றோர் இரண்டுமுறை புகார் அளித்தும், பெரம்பூர் காவல் ஆய்வாளர் சிவதாஸ் புகாரை விசாரிக்காமல் குற்றவாளிக்கு ஆதரவாகவே பேசியுள்ளார்.

இதையடுத்து பெற்றோர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசனிடம் தெரிவித்ததன்பேரில் அவர் காவல் நிலையம் சென்று கேட்டுள்ளார். அப்போதும் காவல் ஆய்வாளர் சரியான பதில் அளிக்காததால், அக்கட்சியினர் பெரம்பூர் கடைவீதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில மணி நேரம் நீடித்த போராட்டத்திற்கு பிறகு வந்த காவல்ஆய்வாளர் சிவதாஸ் குற்றவாளியை கைது செய்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து, ராஜேஷை கைது செய்த பெரம்பூர் போலீசார் வழக்கை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றி குற்றவாளியை அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News