பட்டமங்கலம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் தொடங்கிவைத்தார்
மயிலாடுதுறை அருகே உள்ள பட்டமங்லம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் லலிதா தொடங்கிவைத்தார்.;
மயிலாடுதுறை ஒன்றியம் பட்டமங்கலம் ஊராட்சியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இம்முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள காலைமுதல் ஏராளமானோர் வந்து காத்திருந்தனர். ஆனால், 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
இதனால், டோக்கன் பெற முடியாமல் பயனாளிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பட்டமங்கலம் ஊராட்சியில் தொடர்ந்து இரண்டு நாள்கள் முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.