மயிலாடுதுறை நகராட்சி சுயேட்சை வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை நகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ளது. மயிலாடுதுறை நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 29 வது வார்டு உறுப்பினர் பாஷித்அலிரஹ்மான் என்பவர் சுயேட்சையாக குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் வீடுவீடாக சென்று தான் போட்டியிடும் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது ரயிலடி பகுதியிலுள்ள மளிகை கடையில் மளிகை பொருட்களை எடைபோட்டு பகுதி மக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அப்பகுதி பகுதி மக்களிடம் தென்னை மரத்திற்கு வாக்கு சேகரித்தார்.