கீழப்பெரும்பள்ளத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் : எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கிவைத்தார்

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.;

Update: 2021-06-04 08:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 18 வயதுமுதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

இதில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அவர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், தடுப்பூசி குறித்த அச்ச உணர்வு கொண்டவர்களை இளைஞர்கள் உரிய விளக்கம் அளித்து முகாம்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தினார்.

மேலும், இளைஞர்கள் தேவையின்றி வெளியில் சுற்றி வீட்டில் உள்ள வயதானவர்களுக்க தொற்றை பரப்பும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர் இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ஞானவேலன், நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, பொதுக்குழு உறுப்பினர் முத்துமகேந்திரன், ஊராட்சிமன்றத் தலைவர் ஆராக்கியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News