மயிலாடுதுறையில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக்குகள் எரிந்து நாசம்
மயிலாடுதுறையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளுக்கு மர்ம நபர் தீயிட்டு எரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
மயிலாடுதுறை, தெற்கு குமர கட்டளை தெருவை சேர்ந்தவர் அருள்குமரன் (40). இவரது இரண்டு பைக்குகளை அவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் இவர் நேற்று இரவு பைக்குகளை வாசலில் நிறுத்திவைதிருந்தார்.
நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இரண்டு இருசக்கர வாகனங்களையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். வீட்டின் வெளியே வந்து பார்த்த அருள் குமரன் தனது இருசக்கர வாகனம் பாதி எரிந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனங்களை எரித்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.