என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க சார்பாக தேரிழந்தூரில் நடைபெற்றது.

Update: 2024-05-05 06:09 GMT

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஏழை மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் சிறந்த வழிகாட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தேரிழந்தூர் கிராமத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மற்றும் தேரிழந்தூர் ஜமாத்தார்கள் இணைந்து நடத்திய ஏழை மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் முஹம்மது இஸ்மாயில், பேராசிரியர் முஹம்மது அனஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம் என்று விளக்கம் அளித்ததுடன் ஒவ்வொரு பட்ட படிப்பின் முக்கியத்துவம், கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்றவைகளை விரிவாக எடுத்துரைத்தனர்.

எந்த துறையை தேர்ந்ததெடுக்கலாம்?

அரசு பணியாளர்களுக்கான படிப்பு என்ன? பெண்களுக்கான படிப்பு என்ன? நுழைவு தேர்வு வழிகாட்டுதல், அரசு உதவித்தொகை பெற்று படிப்பதற்கான வழிகாட்டுதல் போன்ற வழிகாட்டுதல்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தங்களுக்கு இருந்த சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற்றனர்.

இந்நிகழ்ச்சியை தேரிழந்தூர் நாட்டாமை பஞ்சாயத்தார் தலைமையிலும் ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையிலும், நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் மாணவ,மாணவிகள் உயர் கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான ஆலோசனைகளை பெற்று விழிப்புணர்வு பெற்றனர். 

Tags:    

Similar News