மதுரை அருகே நெசவாளர் குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை முயற்சி- பரபரப்பு

நெசவாளர் கடன் தொல்லையால் திருப்பரங்குன்றம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.;

Update: 2022-04-04 11:00 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் மனைவி ரோஷினி. இவருக்கு நிகிதா, கார்த்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். ரவீந்திரன் அதே பகுதியில் நெசவு தறி நெய்யும் தொழில் செய்து வந்துள்ளார். தொழிலில் பெரிய வருமானம் இல்லாததால், கடன் சுமை அதிகரித்துள்ளது. இதில் ,விரக்தி அடைந்த ரவீந்திரன்,  குடும்பத்துடன் மதுரைக்கு வந்து திருப்பரங்குன்றம் மலையை சுற்றி வரும் கிரிவலப்பாதை அருகே தன் மனைவி, மகள்கள் என தனது குடும்பத்தினருடன் விஷம் அருந்தியுள்ளனர்.

பின்னர், அவர்கள் அழுது புலம்புவதை கண்ட அங்கிருந்த சாமியார்கள்,  திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பரங்குன்றம் காவல்துறையினர்,  உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடன் தொல்லையால் குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம்,  திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News