மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

வடகிழக்கு பருவ மழையால் மதுரை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-11-09 08:08 GMT

மழையால், பாலமேடு சாத்தையாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு.(கோப்பு படம்)

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. இந்தஅணையின் நீர்மட்டம் கொள்ளளவு 29 அடி ஆகும். கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமானது முதல் கனத்த மழை வரை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து, தற்போது, நேற்று மாலை நிலவரப்படி இந்த அணையில் 22 அடி நீர் மட்டம் வரை உள்ளது. தொடர்ந்து, மழை பெய்தால் சில நாட்களில் அணை நிரம்புவதற்கு வாய்ப்பு வரும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால்,இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள்:

அதேபோல முல்லை பெரியாறு,வைகை அணைகளும்  நிரம்பி வருகின்றன. இதையொட்டி பெரியாறு கால்வாய் மூலம் விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு பொதுப்பணித் துறை மூலம் நாளை (வெள்ளிக்கிழமை) வைகை அணையை திறக்க முடிவு செய்துள்ளது. இதையொட்டி அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை உதவி அலுவலகத்தில் பாசனவிவசாயிகளுக்கு வேண்டிய குறுகிய கால விதை நெல்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில், 35 டன் விதை நெல் இந்த அலங்காநல்லூர் அலுவலகத்திற்கு வந்தது. தற்போது, விவசாயிகள் 20 டன்னிற்கு மேல் வாங்கிப் போய்விட்டார்கள். 120 நாட்கள் வயதுள்ள விதை நெல் ரகங்கள், ஏ.எஸ்' டி. 16, கோ. 51 , என்.எல்.ஆர் ' ஆகிய குறுகிய கால வித்துக்கள் விற்கப்பட்டு வருகிறது. இதில், 1 கிலோ விதை நெல் ரூ 37, ஒரு கிலோவிற்கு மானியம் ரூ 17-ம் 50 பைசாவும், விற்பனை விலை 1 கிலோ ரூ 19-ம் 50 பைசாவுக்கு விற்கப்படுகிறது. இத்தகவலை, வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி, 'வேளாண்மை அலுவலர் வசந்தகுமார், ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News