மதுரை திருப்பாலை கல்லூரி அருகே போதை மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது
புது நத்தம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே சந்தேகப்படும் படியாக நின்ற இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்;
மதுரை மாவட்டம், திருப்பாலையில், கல்லூரி அருகே போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, புது நத்தம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே சந்தேகப்படும் படியாக நின்ற இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தார். அவர்கள் போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களை, கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வடக்குமாசி வீதியை சேர்ந்த கார்த்திக் (25 ), மேலமாசிவீதியை சேர்ந்த அருள்பாண்டி (23 ) என்று தெரியவந்தது. அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.