மதுரையில் ,15 வழித்தடங்களில் புதிய பஸ் : அமைச்சர் துவக்கி வைப்பு

மதுரையில் ,15 புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்தினை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

Update: 2022-04-10 08:59 GMT

மதுரையில் 15   புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கிவைத்தார். 

மதுரை:

மதுரை மாவட்டம், கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆணையூர் பேருந்து நிலையத்தில் இன்று(10.04.2022) போக்குவரத்து துறை, மதுரை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 15 புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் செயல்பாடுகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், திமுக ஒன்றியச் செயலாளர் சி. சிறைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

Similar News