மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில், மாஸ்க் அணிவது இன்று முதல் கட்டாயம் அழைக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்தார்;
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர்.
மதுரை மாவட்டத்தில், மாஸ்க் அணிவது இன்று முதல் கட்டாயம் ஆக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக ,மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மாஸ்க் அணிந்து செல்வதை கண்காணிக்க, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை ஆகியோரைக் கொண்ட தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாத நபர்களை கண்காணிப்பதுடன், அவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆகவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வீட்டை, விட்டு வெளியே செல்லும்போது, முகக் கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.