மதுரையில் 108 அவசர ஊர்தி மரத்தில் மோதி நர்ஸ் காயம்
மதுரையில் 108 அவசர ஊர்தி மரத்தில் மோதியதில், நர்ஸ் காயம் அடைந்தார்.;
மதுரை தெற்கு வாசல் பகுதியில் அவனியாபுரத்தில் இருந்து தெற்கு வாசல் நோக்கி 108 அவசர கால ஊர்தி வந்து கொண்டிருந்தது. அப்போது, வாகனத்தின் கதவு திடீரென திறந்ததால், அதை அடைக்க ஓட்டுனர் முற்பட்டபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் ஒரு சைக்கிள் இடித்து, மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில், பெண் செவிலியர் காயமடைந்தார். அவரை மற்றொரு 108 அவசர கால ஊர்தி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த 108 அவசர கால ஊர்தி மேலாளர் மற்றும் வாகன பராமரிப்பு மேலாளர் சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிட்டனர். இச்சம்பவம் குறித்து, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநர் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.