மதுரை அருகே சிறுமியை கடத்திய வழக்கில் 8 பேர் கைது

மருத்துவமனையில் இறந்த சிறுமியின் உடல் பலத்த போலீஸ் காவலுடன் அடக்கம் செய்யப்பட்டது;

Update: 2022-03-08 04:30 GMT

மதுரை அருகே சிறுமியை கடத்திய வழக்கில் எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தும்பைப் பட்டியில், சிறுமியை கடத்திய வழக்கில் எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர். மருத்துவமனையில் இறந்த சிறுமியின் உடல் பலத்த போலீஸ் காவலுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தும்பை பட்டியை சேர்ந்த சபரி மகளை, அதே ஊரைச்சேர்ந்த நாகூர் ஹனிபா எட்டு பேர் கடத்தி சென்றதாகவும், சில நாள்கள் கழித்து சிறுமியை ஆபத்தான நிலையில்,அவரது வீட்டின் அருகே விட்டு,விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை மதுரை அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் சிகிச்சையில் அனுமதித்தனர்.அங்கு அவர் இறந்து விட்டார். இது குறித்து மேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நாகூர் ஹனிபா உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர். மதுரை மாவட்ட போலீஸ் எஸ்பி பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் , சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News