மாேசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மதுரை சிறையில் அடைப்பு

மாேசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மதுரை மத்திய சிறைச்சாலையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.;

Update: 2022-01-06 08:23 GMT

மாேசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி வரை மோசடி செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்றைய தினம் கர்நாடக மாநிலத்தில் ஓசூரில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் 6 மணி நேர விசாரணைக்கு பின்பு ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2 நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 15 நாள் நீதிபதி காவலில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து மதுரை மத்திய சிறைச்சாலையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News