ஊத்தங்கரை, அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரிவு உபசார விழா
Krishnagiri News, Krishnagiri News Today-ஊத்தங்கரை சீனிவாச நகரில் >ள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
Krishnagiri News, Krishnagiri News Today- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சீனிவாச நகரில் அமைந்துள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
முதலாவதாக குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைக்கப்பட்டது. இளம் அறிவியல் இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை பயிலும் மாணவப் பேரவைச் செயலாளர் திருமலைச்செல்வி வரவேற்றார். அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஷோபா திருமால்முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சீனி திருமால் முருகன் பேசுகையில், இறுதியாண்டு மாணவிகள் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் ஈடுபாட்டுடன் கல்வியோடு பிற துறைகளிலும் செயல்படுவதை கூறி, மேலும் படிப்பிற்கு பொருளாதாரம் ஒரு போதும் தடையில்லை. வாழ்வில் உயர ஆயிரம் கரங்கள் உண்டு, குடும்ப சூழ்நிலை, சமூகநிலை என எந்நிலையில் இருந்தாலும் திறமையினால் வெற்றி பெற முடியும். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது என்று மாணவிகளை ஊக்கப்படுத்தி வாழ்த்துரை வழங்கி பேசினார்
அதன்பின் மாணவிகள் பயிலும் காலங்களில் ஏற்பட்ட நல்மாற்றங்களையும் கல்லூரி அனுபவத்தையும் பின்னோட்டமாக வழங்கினா். கணிதவியல் துறை மூன்றாமாண்டு பயிலும் மாணவப் பேரவைத் தலைவி நிவேதா நன்றி கூறினார்.