குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: கூலித்தொழிலாளி கைது!
உத்தனப்பள்ளி அருகே குடிபோதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அஞ்சலகிரி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் வசித்துவருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டர். இவர் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு உத்தனப்பள்ளி அடுத்த தேவசானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் குடிபோதையில் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அப்பொழுது அவர் கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அந்த பெண்ணை மீட்டனர். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீஸ் எஸ்.ஐ. சரவணன், முனிகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.